• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பால மீனாம்பிகை திருக்கோவில் கொடியேற்றம்..,

ByKalamegam Viswanathan

Apr 29, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை திருக்கோவில் உள்ளது. மதுரையை தலைநகராக ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற உள்ளது அதேபோல மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். எட்டாம் நாள் நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் மற்றும் அதைத்தொடர்ந்து ஒன்பதாம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.