மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட
வி. பெரியகுளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் பாறைப்பட்டி சரந்தாங்கி வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் கடந்த ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.
இந்த நிலையில் சென்ற ஆண்டு அறங்காவலராக பொறுப்பேற்ற பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொங்கல் வைப்பதற்கு தான் மட்டுமே நீதிமன்ற ஆணை பெற்று வந்ததாக தவறான தகவல்களை அதிகாரியிடம் கூறியதாக கூறப்படுகிறது ஆனால் நீதிமன்றத்தில் அனைத்து கிராம மக்களையும் ஒன்று சேர்த்து பொங்கல் வைப்பதாக கூறியதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்
நான் மட்டுமே பொங்கல் வைப்பேன் மற்ற யாரும் வைக்க கூடாது என அதிகாரிகளிடம் கூறியதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து கிராம பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வி. பெரியகுளம் கிராமத்தில் இருந்து மேளதாளம் அதிர்வேட்டுகள் வான வேடிக்கைகளுடன் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள அய்யனார் கோவிலுக்கு பொங்கல் வைப்பதற்கு ஊர்வலமாக வந்தனர்.

இந்த நிலையில் பொங்கல் வைக்க அனுமதி இல்லை என காவல்துறை மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் இதில் உடன்படாத பொதுமக்கள் பொங்கல் பானையை கொண்டு வந்த பிறகு திருப்பி கொண்டு போவது ஆன்மீக முறையாக இருக்காது ஆகையால் எங்களை பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டுஎன கோரி காவல்துறை மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் பானையை கூட்டி அடுப்பு வைத்து பொங்கல் வைக்க தொடங்கினர். இதனையடுத்து அந்த இடத்திற்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் பொங்கல் வைக்க கூடாது என கோரி பொங்கல் பானையை தட்டி விட்டும் தண்ணீரை கீழே கொட்டியும் ஈடுபட்டனர்.
இதனால் பொங்கல் வைத்த பெண்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனை அடுத்து அந்தப் பகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் நீதிமன்ற ஆணை பெற்றதாக கூறி அறங்காவலர் தனது ஆதரவாளர்களுடன் அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்கு ஊர்வலமாக வந்தார். இதனால் இரு தரப்பினருக்கும் பிரச்சனை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் சாமி கும்பிடுவதற்கு அறங்காவலரிடம் பொதுமக்கள் சார்பில் கேட்கப்பட்டது.
ஆனால் அதற்கு அனுமதிக்க முடியாது என அறங்காவலர் கூறினார் நீதிமன்ற உத்தரவில் சாமி கும்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை பொங்கல் வைக்க கூடாது. என்று தான் உள்ளது ஆகையால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிட ஏற்பாடு செய்யுங்கள் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் ஐந்து கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகளோ அறங்காவலர் சொன்னால் தான் அனுமதிக்க முடியும். இல்லையென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.
எனவே எல்லாரும் திரும்பி அவர்களின் ஊருக்கு செல்லுங்கள் என கூறினர். இதையடுத்து முறைப்படி நீதிமன்ற ஆணை பெற்று சாமி கும்பிடுவது மற்றும் பொங்கல் வைப்பது என முடிவு செய்து கொள்ளலாம் என மாணிக்கம் பட்டி வெள்ளையம்பட்டி பாறைப்பட்டி சரந்தாங்கி பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இரவு 8 மணிக்கு மேல் தங்கள் ஊருக்கு திரும்பி சென்றனர். தொடர்ந்து ஐந்து கிராம பொதுமக்களுக்கும் அறங்காவலருக்கும் ஏற்பட்டு வரும் இந்த பிரச்சனையால் தொடர்ந்து இந்த பகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது இந்து சமய அறநிலைய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டுமென ஐந்து கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.