• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

எட்டையம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா..,

ByVasanth Siddharthan

May 4, 2025

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட எட்டையம்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் மீன் பிடி திருவிழா நடத்துவது வழக்கம்.

தற்போது கண்மாயில் நீர் குறைந்ததால் மீன் பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி, மற்றும் வெளி மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்டு ஊத்தா மீன் பிடி கூடையை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது.

மீன் பிடி பிரியர்களுக்கு மட்டும் 2 கிலோ முதல் 5 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தது.