• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதல் நீ முடிவும் நீ படம் எப்படியிருக்கிறது

தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளங்களில் ஒன்றாக இருக்கும் ஜீ5 தளத்தின் அடுத்த வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ” திரைப்படம் வெளியாகியுள்ள தமிழ்நாட்டில் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதுசின்னச்சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தர்புகாசிவா, கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அவர் இப்போது இயக்குநராக உயர்ந்திருக்கிறார்.
அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல்படம் முதல் நீ முடிவும் நீ.நேரடியாக ஜீ5 இணையத்தில் வெளியாகியிருக்கிறது இப்படம்.
நாயகிஅமிர்தாமாண்டரின்,நாயகனாக கிஷன்தாஸ் மற்றும் நண்பர்களாக பூர்வா ரகுநாத், கே.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் சிஎஸ்வி, ஹரினி ரமேஷ் என நிறையப்பேர் நடித்துள்ளனர்.வளரிளம்பருவ நடிகர் நடிகைகளை வைத்துக்கொண்டு உயர்நிலைப் பள்ளிக்கூட வாழ்க்கையை மையமாகக் கொண்டு படத்தை எடுத்திருக்கிறார் தர்புகாசிவா.
நாயகன் நாயகி உட்பட அனைவருமே அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதும் காண்போரின் பள்ளிக்கால நினைவுகளுக்கு இழுத்துச் செல்லும் வகையில் பாத்திரங்கள் அமைந்திருப்பதால் படம் நன்றாகவே நகர்கிறது.
கிஷன் தாஸ் அளவான நடிப்பு, அம்ரிதா அழகு இவர்களோடு சைனீஸ் ஆக வரும் ஹரீஷ் இரசிக்கவைத்திருக்கிறார்.
சுஜித்சாரங் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன. அவருடைய புண்ணியத்தால் நாயகி அம்ரிதா கூடுதல் அழகாகத் தெரிகிறார்.
தர்புகாசிவாவே இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் பரவாயில்லை இரகம். பின்னணி இசை பலம்.

ரீயூனியன் உள்ளிட்ட இரண்டாம்பாதிக் கதையில் கொஞ்சம் தொய்வு. லெளகீக வாழ்க்கை அதாவது குடும்பம் குழந்தைகள் என ஆகி அன்றாட வாழ்க்கைச் சூழலில் சிக்கும்போது ஆறுதலாக அமைவது அவரவர் பால்யகாலநினைவுகளே.அவற்றை மீட்டெடுத்து வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனவுறுதியைக் கொடுக்க எண்ணியிருக்கிறார் இயக்குநர் தர்புகாசிவா.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.