• Sun. Jun 4th, 2023

நடிகர் ஜெயராமுக்கு கொரோனா!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ஆம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர்கள் சத்யராஜ், மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன், நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள்.

இந்நிலையில், மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ஜெயராம், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும். தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *