
தேவா இசையில், பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகவும்
ரெடின் கிங்ஸ்லீ காமெடியனாகவும் நடித்துள்ள “வா வரலாம் வா” திரைப்படத்தின் FirstLook வெளியீடு!
பிக்பாஸ் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “வா வரலாம் வா”.
எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் – எஸ்பிஆர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக “மைம்” கோபி நடித்துள்ளனர். 40 குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டிங் செய்துள்ளார்.
இந்நிலையில், வா வரலாம் வா திரைப்படத்தின் First Look வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ‘அம்மா டாக்கீஸ்’ ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், இப்படத்தின் கதாநாயகன் பாலாஜி முருகதாஸ், கதாநாயகி மஹானா சஞ்சீவி மற்றும் படத்தின் இயக்குநர்கள் எல்.ஜி. ரவிசந்தர் – எஸ்.பி.ஆர், படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா, இயக்குநர் சரவண சுப்பையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வெளியாகியுள்ள இந்த First Look போஸ்டரில் பாலாஜி முருகதாஸ் உடன், ரெடின் கிங்ஸ்லீ இணைந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும், பாலாஜி முருகதாஸ் பார்ப்பதற்கே வண்ணமயமான லுக்கில் ஸ்டைலாக இருக்கிறார். படத்தின் தலைப்பு அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளது.

- சிவகாசி அருகே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த, 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு சீல்…..சிவகாசி அருகே, பட்டாசு விற்பனை கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த … Read more
- வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம்..,பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்படி, பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி, மதுரை மண்டல பேரூராட்சிகளின் … Read more
- 26 வருடங்களாக ஆளில்லாமல் இருக்கும் தாய்லாந்தின் ‘சந்திரமுகி’ பங்களா..!சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான பாங்காக்கில் பல ஆண்டுகளாக ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் … Read more
- லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து..!இன்று நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து … Read more
- இன்று தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீடு..!தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் … Read more
- தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!தமிழகத்தில் இன்று முதல் காலாண்டு தேர்வு முடிவடையும் நிலையில், நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக … Read more
- இன்று முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை … Read more
- இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு 4 … Read more
- தமிழகத்தில் அக்.2ல் கிராமசபைக் கூட்டம்..!தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என … Read more
- வருகிறது சென்னை புறநகரில் புதிய தீம் பார்க்..!தமிழகத்தில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய தீம் பார்க் வர இருப்பதாக அரசு … Read more
- உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் … Read more
- பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை ..? ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ … Read more
- பொது அறிவு வினா விடைகள்
