• Sat. May 4th, 2024

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

Byஜெ.துரை

Sep 14, 2023

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘மை3’ சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரிஜினல் சீரிஸில் நடிகை ஹன்சிகா மோத்வானி,  நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் “மை3” வெப் சீரிஸ் இயக்குநர் ராஜேஷ் M இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் இந்த ஒரிஜினல் வெப்சீரிஸின் டிரெய்லரை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் சீரிஸுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கலவையாக அமைந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.  

முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புக்குள்ளாகி விடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, மை3  என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை.

இந்த வெப் சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை 3” வெப் சீரிஸை Trendloud நிறுவனம் தயாரித்துள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *