• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டி புதூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மனவளர்ச்சி குன்றிய நிலையில் 2 மகள்கள் உள்ளனர் .இந்நிலையில்
சிவகாசி அருகே சாமி நத்தத்தில் உள்ள கிருஷ்ணகுமார் பட்டாசு ஆலையில் போர்மேன் ஆக பணியாற்றி வந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக தனக்கு ஊதியம் கொடுக்கவில்லை என்றும், பட்டாசு ஆலை உரிமையாளர் சம்பளம் கொடுக்க மறுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மல்லி காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்த போது, மாதம் ரூபாய் 6000 ரூபாய் ஊதியம் வழங்குவதாகவும் ஆலை உரிமையாளர் உறுதியளித்தும் ஊதியத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த கருப்புசாமி தனது மனைவி மற்றும் மகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தபோது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

இதைக்கண்ட போலீசார் ஓடிச்சென்று கருப்பசாமியை தடுத்து நிறுத்தி, கருப்பசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.