• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பட்டாசு தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு….

ByK Kaliraj

Nov 20, 2025

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை முத்துமாரி நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரகாஷ். இவருக்கு சாந்தி (வயது 35), என்ற மனைவியும் 16 வயதில் மகள் மற்றும் 14 வயதில் மகனும் உள்ளனர்.

பட்டாசு தொழிலாளியான சாந்தி வழக்கம் போல் தனது இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வருவதால் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது சாந்தி படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் அறிந்து வந்த திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த சாந்தியின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் பெண் பட்டாசு தொழிலாளி உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.