மதுரை கீரை துறை பகுதியை சேர்ந்த முனியம்மாள் வயது 65 இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற பொழுது வழுக்கி வலது கால் கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்டது.

அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் உடனடியாக மதுரை அனுப்பானடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் அசோக் குமார் தலைமையிலான வீரர்கள் சிவக்குமார் ராதாகிருஷ்ணன் ரவிக்குமார் முருகன் கோ சிவகுமார் முருகேஸ்வரன் பிரேம்குமார் ஆகியோர் இணைந்து சுமார் 45 நிமிடங்கள் போராடி கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி கோப்பையை உடைத்து முனியம்மாள் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பத்திரமாக மீட்டனர்.

நிலைய அலுவலர் சிவக்குமார் அவர்களின் துரித நடவடிக்கையால் எவ்வித காயம் இன்றி மீட்டது தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு அக்குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியினை கூறினர்.




