விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே வி. மீனாட்சியாபுரத்தில் ஜெயபால் (50) சட்ட விரோதமாக உரிய உரிமங்கள் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் முத்துக்குமார் என்பவர் உரிய உரிமம் இன்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
வெம்பக்கோட்டை அருகே தாயில் பட்டியில் குடோனில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட சிவகாசியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ராஜபாண்டி (25) அவருக்கு சொந்தமான பட்டாசு கடையின் பின்புறம் உள்ள தகர செட்டில் உரிய அனுமதி இன்றி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அதேபோல சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த காளிமுத்து (41), வீட்டில் அரசு விதிமுறைகளை மீறி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அவரை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஓ.சங்கரலிங்கபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு செய்வதற்கான மூலப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த பூமிநாதன் (62) என்பவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
வெம்பக்கோட்டை அருகே வி. துரைசாமிபுரம்-பூசாரி நாயக்கன்பட்டி சாலையில் மினி சரக்கு வாகனத்தில் பட்டாசு மூலப் பொருட்களை எடுத்துச் சென்ற அன்பழகன், காளிராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.






; ?>)
; ?>)
; ?>)
