பெரம்பலூரில் உள்ள பட்டாசு கடைகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என தீயணைப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், பெரம்பலூர் நகரில் பட்டசு கடைகளில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் நகரில் 34 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளில், போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதா என சோதணை செய்த அதிகாரிகள், தீத்தடுப்பு சாதனங்கள் உள்ளதா என்றும் அங்கு பணிபுரிபவர்கள் சாதனங்களை இயக்கத் தெரிந்திருக்கின்றனரா என்றும், தீ தடுப்பு சாதனங்களை இயக்கத் தெரியாதவர்களுக்கு அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்றும் தீயணைப்பு அதிகாரிகள் கற்றுத்தந்தனர்.
மேலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், சீன பாட்டாசு, நாட்டு பட்டாசு போன்றவற்றை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.