ஜெயலலிதாவின் உதவியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்த காலத்தில் நிழல் போல் பரபரப்பாக காணப்பட்டார். ஜெயலலிதா, அதிமுகவின் பல்வேறு சொத்துக்களை பூங்குன்றனின் பெயரில் தான் வாங்கினார். அதிமுகவின் சொத்துக்களை பராமரிக்கும் நிர்வாகியாகவும் பூங்குன்றனை தான் ஜெயலலிதா நியமித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அரசியல் தொடர்புகளில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்ட பூங்குன்றன் தற்போது தஞ்சையில் வசித்தபடி விவசாயம் செய்யும் இவர், கோயில்களுக்கு சென்று திருப்பணிகளையும் அவ்வப்போது செய்துவருகிறார். அரசியலில் இருந்தும், ஆட்சியாளர்களிடம் இருந்தும் முற்றாக ஒதுங்கிக் கொண்டார்.

தற்போது அதிமுகவில் நடந்துவரும் பல்வேறு குழப்பங்களும், உட்கட்சி பூசல்களும் அதிகரித்து வருகிறது. இது அதிமுக தொண்டர்களிடம் மிகப்பெரிய அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, சசிகலாவும் தற்போது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இதை அனைத்தையும் அமைதியாக கவனித்து வந்த பூங்குன்றன் தற்போது தனது கருத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளார். அவர், இதே நிலை நீடித்தால் அதிமுக சுக்குநூறாய் தகர்ந்துவிடும் என எடப்பாடி மற்றும் சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.