• Fri. Jan 24th, 2025

சிவகாசியில் பட்டாசு தயாரிக்க பயன்படும் அட்டை குடோனில் தீ விபத்து-தொழிலாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ByG.Ranjan

Apr 7, 2024

சிவகாசி பி.கே.எஸ்.ஆறுமுகம் சாலையில் மாரிராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசுகள் பேக்கிங் செய்ய பயன்படும் அட்டை பெட்டி தயாரிப்பு குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று விடுமுறை என்பதால் குடோன் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென குடோனிலிருந்து புகை வெளியானதால் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பான அட்டைப் பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் சேதமானது, மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.