கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டான் கோவில் பகுதியை சார்ந்தவர் முருகன். இவர் கோடங்கிபட்டியை அடுத்த பெருமாள்பட்டியில் பழைய பேருந்து கூண்டுகளை வாங்கி உடைத்து விற்பனை செய்து வருகிறார்.

இன்று வழக்கம் போல் ஊழியர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி அடுத்தடுத்த பேருந்து கூண்டுகள் எரிய துவங்கியது.
இதனை பார்த்த பொதுமக்களும், ஊழியர்களும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்குள்ளாக 22 பேருந்து கூண்டுகள் எரிந்து நாசமாயின. இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிந்து போன பேருந்து கூண்டுகளின் மதிப்பு பல லட்சம் வரும் என கூறப்படுகிறது.