• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சேலம் பஞ்சுமெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து..!

சேலத்தில் பஞ்சுமெத்தை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.


சேலம் சங்கர் நகர் உடையப்பா காலனி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் இவர் கடந்த சில வருடங்களா பொன்னம்மாபேட்டை அருகே அய்யனார் கோவில் காடு பகுதியில் மெத்தை தலையணை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் வழக்கம் போல் ஊழியர்கள் மெத்தை தலையணை உற்பத்தி செய்வதற்காக பஞ்சை பிரித்தெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.


அப்போது பிரித்தெடுக்கும் மோட்டாரில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீப்பொறி ஏற்பட்டதால் தீ மளமளவென பரவத் துவங்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் கட்டுக்குள் அடங்காததால் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அங்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் மதிப்புள்ள மெத்தை தலகாணி பஞ்சு எரிந்து நாசமாயின. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.