



இன்று மதியம் சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து கோவை நோக்கி வந்த போது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்திதுள்ளார்.
திடீரென பேருந்தில் தீப்பிடித்தது இதனை எடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில் பேருந்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

சூலூரில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

