• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்

ByA.Tamilselvan

Sep 21, 2022

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ”1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக கரோலின் வக்கீல் ராபர்ட்டா கப்லன் கூறும்போது, “டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24-ந்தேதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்” என்றும் தெரிவித்தார். பெண் எழுத்தாளரின் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்” என்றார். ஏற்கனவே டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.