• Sun. Dec 3rd, 2023

இலவசமாக ஆட்டோ சேவை செய்துவரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்..

Byகாயத்ரி

Mar 12, 2022

சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முதியவர் மற்றும் பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை வழங்கி வருகிறார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சுமார் 2 கோடி பேர் வசித்து வருகின்றனர். அதில் அலுவலகம், கல்லூரி, மருத்துவமனை போன்ற தேவைகளுக்காக தினமும் 10 லட்சம் பேர் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர அரசு பேருந்து, புறநகர் மின்சார ரயில் போன்றவைகள் மூலம் நடுத்தர மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ளுகின்றன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தனியார் நிறுவனங்களில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் சுமார் மூன்று மடங்கு இருசக்கர வாகனம் சென்னையில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரண்டாவது ஓனர் என்று சொல்லக்கூடிய செகண்ட் ஹேண்ட் பைக்குகள் விற்பனை அதிகரித்தது. இந்நிலையில் ஆட்டோக்களின் பங்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சென்ட்ரல் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதிகளில் ஆட்டோக்கள் அதிகரித்துள்ளதும் தமிழக அரசு மகளிருக்கு கட்டணமில்லா பயணம் அறிவித்த பிறகு ஆட்டோ ஓட்டுனர்களின் வருவாய் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜி அசோக்(50) என்பவர் முதியோருக்கு இரவு 10 மணிக்கு மேல் இலவசமாகவே ஆட்டோ சேவை அளித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மருத்துவம் செல்வதற்கான அவசர தேவைக்கு 24 மணிநேரமும் இலவச சேவை வழங்கி வருகிறார். கேரளாவில் இருந்து குடிபெயர்ந்த 23 ஆண்டுகளாக சென்னையில் ஆட்டோ ஓட்டி வருவதாகவும் ,அதன் மூலம் நிறைய வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *