• Sun. May 12th, 2024

2024 ஜனவரி முதல் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் உயர்வு..!

Byவிஷா

Dec 17, 2023

வருகிற 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருசக்கர, நான்கு சக்கரம், ஆட்டோ ரிக்ஷா என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை போக்குவரத்து துறை முடிவு செய்கிறது. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் மோட்டார் சைக்கிள் பயிற்சி பெறுவதற்கான கட்டணமாக ரூ.2,200, ஆட்டோ ரிக்ஷா கட்டணமாக ரூ.3,000, கார், இதர இலகு ரக வாகனங்களுக்கான கட்டணமாக ரூ.4,000 மற்றும் பேருந்து போன்ற வாகனங்களுக்கான கட்டணமாக 6,000 வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநில போக்குவரத்து துறை அமைச்சகம் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அந்த வகையில், மோட்டார் சைக்கிள் பயிற்சி பெறுவதற்கான கட்டணம் ரூ.3,000 ஆகவும், ஆட்டோ ரிக்ஷா கட்டணம் ரூ.4,000 ஆகவும், கார், இதர இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.7,000 ஆகவும், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூ.9,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறை ஜன.1 முதல் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *