• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 28, 2024

மகிழ்ச்சி பொன்மொழிகள்

மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக
வையுங்கள்.. கிடைக்கும்
இடத்தில் பெற்றுக்கொண்டு..
கிடைக்காத இடத்தில்
கொடுத்து விட்டு செல்வோம்..!

மகிழ்ச்சி என்பது பெறுவதில்
இல்லை.. பிறருக்கு கொடுப்பதில்
தான் இருக்கிறது..!

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது
பிறரை மகிழ வைப்பதில்
தான் இருக்கிறது..!

பிறக்கும் போதே யாரும்
மகிழ்ச்சியாக பிறப்பதில்லை..
ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்
தகுதியுடனேயே பிறக்கிறார்கள்..
உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்
கொள்ள நீயே முயற்சி செய்..!

ஒரு செயலை செய்வது வெற்றி
அல்ல.. அதை மகிழ்ச்சியாக
செய்வதே வெற்றி.. எதையும்
சிறு புன்னகையுடன்
எதிர்கொள்ளுங்கள்..!