

நம்பிக்கை தரும் பொன்மொழிகள்
பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று. வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற பழமொழியை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சுயமாக சிந்திக்க தெரிந்தவனுக்கு அடுத்தவர்களின் ஆலோசனைகள் தேவை இல்லை.
ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை. அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால் நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
சரி எது..? பிழை எது..? என எம்மால் சிந்திக்க முடிந்தால் மற்றவர்களின் ஆலோசனைகள் எமது வாழ்க்கைக்கு அதிகம் தேவைப்படாது.
