
பொன்மொழி
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வி இல்லை.
நாம் வாழும் வாழ்க்கையில் அனைவருக்கும் துன்பங்கள் வரும். துன்பங்களும் கவலைகளும் இல்லாத வாழ்க்கை இல்லை.
துன்பங்கள் வரும் போது அதை தைரியமாகவும் சாதுரியமாகவும் எதிர் கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். துன்பங்களை கண்டு துவண்டு விட கூடாது. அனைத்திலும் வெற்றி அடைவதற்கான ரகசியம் விடா முயற்சி.
வெற்றி எனும் அர்த்தத்தை இலகுவில் அடைந்து விட முடியாது. ஆனால் விடா முயற்சியம் கடின உழைப்பும் நிச்சயம் வெற்றியை தேடி தரும்.
தற்போதைய சிறு முடிவு மூலம் உங்களுடைய எதிர்காலம் அனைத்தையும் மாற்ற முடியும்.
இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் எடுத்த முடிவில் இருந்து பின் நகரக்கூடாது. நீங்கள் எடுக்கும் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டும்.
