• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 27, 2022

சிந்தனைத்துளிகள்

உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.

நடைமுறைக்கு ஒத்துவராத விஷயத்தை ஞானம் என்று சொல்லுவது பிழை.

தியானம் செய்வதை தினசரி கடமையாக கொள்ளுங்கள்.
தியானத்தால் மனதில் துணிவும் ஆற்றலும் உண்டாகும்.

பிறர் நம்மை தாழ்வாக கருதவோ, நடத்தவோ இடம் அளிக்க கூடாது.

உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள்.
சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்.

தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும்
மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.

இயற்கையை மதித்து வாழ்ந்தால் எந்த தீமையும் உண்டாகாது.
இது சாதாரண விஷயமல்ல. இதுவே உண்மை ஞானம்.