சிந்தனைத்துளிகள்
விஷயங்களை அறிந்துகொள்ளும்
ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான்.
வெற்றிக்கு திட்டமிடாதவர்கள் தானாகவே தோல்விக்கு
திட்டம்போட்டு விடுகிறார்கள்.
நேரம் வரட்டும் பல நல்ல செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம்
என்று காத்திருப்பவன் எந்த நேரத்திலும் எதுவும் செய்யமாட்டான்.
ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும்
நேர்மையானவனாக இருப்பது மேலானது.
வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே,
அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு
மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து,
புகாருடன் வாழ்ந்து,
ஏமாற்றத்துடன் இறக்கின்றான்.
நிழலின் குளுமையை இழந்தால் தான்
சூரியனின் பிரகாசத்தை அடைய முடியும்.
சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது.
சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது