
சிந்தனைத்துளிகள்
• எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை!
அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை!
• துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு
ஆனால், அது கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
• தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு!
தோல்வி கூட ஒரு நாள்
இவன் அடங்கமாட்டான்னு உன் கிட்ட தோற்று விடும்!
• வாழ்க்கை என்பது மொட்டுக்கள் நிரம்பிய மலர் தோட்டம்
நீ சிரிக்கும் போது மட்டுமே அதில் பூக்கள் பூக்கிறது!
• நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள்
நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்!