• Thu. May 2nd, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 19, 2023

சிந்தனைத்துளிகள்

‘மறைந்திருக்கும் உண்மைகள்’ என்ற ஓஷோ நூலிலிருந்து சில கருத்துகள்

முல்லா நஸ்ருத்தீன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டார். எப்போதும் குற்றம் குறைகளே சொல்லிக் கொண்டிருந்த அவர் திடீரெ‎ன ஒரு நாள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அதைக் கண்டு ஊரே ஆச்சரியப்பட்டது. அவர்கள் கேட்டார்கள், “இன்று மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே? என்ன ரகசியம்?”
முல்லா பதிலளித்தார், “தவிர்க்க முடியாதவற்றோடு நான் சமரசம் செய்து கொண்டு விட்டேன். பல ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு இதை நான் கண்டு கொண்டேன். வாழ்வில் என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். அதனால் தவிர்க்க முடியாமல் எது வந்தாலும் அந்தச் சூழலோடு ஒத்துப் போக முடிவு செய்து விட்டேன். இனி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.”
முல்லா விமானத்தில் நடை பயின்று கொண்டிருந்தார். ஏன் என்று கேட்டதற்கு “எனக்கு ரொம்ப அவசரம்” என்றார். விமானம் தரையிறங்கி, அவர் சேர வேண்டிய இடத்தை அடைந்தபோது அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அவ்வளவு களைப்பு! கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. இதை அவர் விமானத்திலேயே செய்திருக்க வேண்டும்!
பிரபஞ்சம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது. அவசரப் படத் தேவையே இல்லை. அவசரப்பட்டுப் பயனும் இல்லை. இதை அறிந்து கொண்டவரே சமயப் பண்பு கொண்டவர். பிரபஞ்ச இயக்கத்தோடு ஒன்றிணைந்து ஒத்திசைந்து போனால் அதுவே பரவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *