• Sun. Jun 4th, 2023

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 1, 2023

சிந்தனைத்துளிகள்

நிபந்தனையற்ற அன்பு!

ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த இளம்பெண், தேவதையாகவே காட்சியளித்தாள்.
அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், “கொ… கொஞ்…கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான்.
அவனை ஏற இறங்கப் பார்த்த அவள், அவன் கடும்பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள்.
உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை மெதுவாகக் குடித்து முடித்தான்.
“நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான்.
“நீங்க எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள் கனிவுடன்.
பின்னாளில் அவன் பெரிய மருத்துவ நிபுணன் ஆனான் அவன் பணி புரிந்த அதே மருத்துவமனையில், பசியால் வாடிய போது பால் தந்தவள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டிருந்தாள்.
அவள் யார் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மருத்துவர் அன்றிலிருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக் கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.
அந்த ஏழைத் தாய் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ பில்லைப் பார்த்தாள். கட்டண தொகைக்கு கீழே, மருத்துவர் எழுதியிருந்தார்.

“ஒரு டம்ளர் பாலூக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழு கட்டணமும் செலுத்தப்பட்டு விட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி.
நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வோம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *