வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்
உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்
உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்
உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும்.
வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்
உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்
உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்
உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும்.
பெரு வெள்ளம் வந்திட்ட போதும்
சிறு துளியென எண்ணி
சிந்தை கலங்காது எப்போதும்
சிறப்புடன் கடந்திட்டல் வேண்டும்.