• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வீட்டுப்பாடம் செய்யாத மகனை தொங்கவிட்ட தந்தை…ராஜஸ்தானில் கொடூரம்

Byகாயத்ரி

Nov 27, 2021

ராஜஸ்தான் மாநிலம், தாபி பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாத தனது மகனை மின்விசிறியில் கட்டி தொங்க விட்டு கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 17-ம் தேதி நடந்துள்ளது. மேலும் முரட்டுக் குணம் கொண்ட அந்த தந்தை, தனது மகள் மற்றும் மகன் மீது இப்படிதான் கொடூரமாக நடந்து கொள்கிறார் என அவரது தாய் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் நடக்கும்போது, கணவனின் இந்த கொடூரச் செயல் குடும்பத்தினருக்குத் தெரியவேண்டும் என்றே இதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் இதைத் தனது உறவினர்களிடம் காட்டியுள்ளார்.


இதைப்பார்த்த அவரது சகோதரர் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தெரிவித்துள்ளார். கணவன் மீது யாரும் புகார் கொடுக்காத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மகனை மின்விசிறியில் கட்டித் தொங்கவிட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.