மதுரை சோழவந்தான் அருகே காதலை கைவிட மறுத்த மகளை சராமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை கைது.
மதுரை சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் வடக்குதெருவை சேர்ந்தவர் முரளி விவசாய கூலி வேலை செய்துவரும் நிலையில் திருமணமாகி மனைவி, இருமகள்களுடன் வசித்து வருகிறார்
இந்த நிலையில் இவரது மூத்தமகளான 17 வயது மகள் அப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது
காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் பெற்றோர் காதலை ஏற்காமல் கை விடுமாறு அறிவுரை கூறியுள்ளனர் இதனால் மாணவிக்கும் அவரது தந்தை முரளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முரளி அவரது மகளை கத்தியால் சராமாரியாக குத்தினார்.இதில் படுகாயமடைந்த மாணவி ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தப்பியோடிய அவரது தந்தை முரளியை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்