மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கையில் மக்காச்சோள பயிறுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் போதிய மழை இல்லாமலும் படைப்புழு தாக்கத்தாலும், 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரப்பட்ட மக்காச்சோளம் மகசூல் இல்லாம் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பொருளாளராக ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே தமிழக அரசு ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் நிவராணம் வழங்கக் கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கையில் மக்கச்சோள பயிறுடன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், அப்பகுதி விவசாய நிலங்களுக்கு நடுவே பட்டாசு தொழிற்சாலை அமைத்து வருவதாகவும், இதுபோன்ற தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டால் அப்பொழுது விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும் எனவும், எனவே மாவட்ட நிர்வாகம் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.