• Mon. Apr 29th, 2024

விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ByN.Ravi

Mar 23, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் நியாய விலை கடைகளில் விற்கப்படும் பாமாயில் எண்ணெயின் விற்பனையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கை 66 வது வாக்குறுதியாக தேங்காய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் எனஉறுதி அளித்து இருந்தது. ஆனால் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு 20 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தேங்காய் தற்போது பத்து ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. நிலக்கடலை பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாமல் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள். இனியும் பொருத்திருந்தால் நம் நாட்டின் விவசாயிகள் அகதிகளாக வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மதுரை தென்னை விவசாய சங்கம்
மதுரை மாவட்டம் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட சங்கங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஈசன் முருகசாமி மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தமிழக முதல்வர் கடந்த 2021 இல் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததன் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பதை ரத்து செய்யும் தேர்தல் அறிக்கையை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளார் வினோத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், காராமணி, ராஜேஸ்வரன், ஸ்ரீகாந்த், மீரான் மைதின், தமிழ்மணி, ராஜாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புரையாக சண்முகசுந்தரம், முத்து விஸ்வநாதன், உதயகுமார் ,நேதாஜி, அன்வர் பாலசிங்கம், குமரேசன், அலெக்ஸ் என்ற கருணாகரன், சின்ன யோசனை பெருமாள் தேவர், கம்பூர் செல்வராஜ், ராமசாமி, சொக்கன் ஆகியோரும் உழவர் போராளிகள் செல்லையா, சுஜித் குமார்,ஜெயச்சந்திரன் துரைப்பாண்டி, வீரனன், ஒச்சா தேவர், அன்னக்கொடி, பிரபாகரன், சிவா, பாண்டியராஜன், தவமணி, முருகன், ஜெயக்கொடி , ராமர், சின்னன், மொக்க பாண்டி, காட்டுராசா, ஞானசேகரன், அய்யனார் உள்பட விவசாயசங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *