• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பல்லடம் அருகே பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என கோரி நான்கு பகுதிகளில் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டமானது கடந்த 2002 ஆம் ஆண்டு சுமார் 355 கிலோமீட்டர் இருகூர் முதல் தேவனகொண்டி வரை இரு மாநில அரசின் ஒப்புதலோடு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது இரு ஊரிலிருந்து முத்தூர் வரை சுமார் 70 கிலோ மீட்டர் விவசாயி நிலங்களின் வழியாக அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் கோடாங்கி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து விவசாயிகள் கூறுகையில்..,

தற்போது இருகூரிலிருந்து காங்கயமுத்தூர் வரை சுமார் 70 கிலோமீட்டர் எண்ணெய் குழாய் பாதிக்கும் திட்டமானது சாலையின் வழியே கொண்டு செல்ல அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இருப்பினும் எண்ணெய் நிறுவனம் விவசாய நிலங்களின் வழியே என்னை குழாய்களை படிக்கும் செயல்பட்டு வருவதாகவும், எனவே உடனடியாக அதனை கைவிட்டு சாலை ஓரங்களில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் குழாய்களை பதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.