• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

ByM.JEEVANANTHAM

Sep 25, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வருவாய்த் துறையினர், நீர்வள ஆதாரத்துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறினர்.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் குத்தாலம் தாலுக்கா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்ற விவசாயி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதற்கு பதிலாக வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்வதாகவும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பரபரப்பு குற்றச்சாட்டு எழுப்பினார். மணல் கடத்தல் தாதாக்கள் குறித்து கேள்வி எழுப்பினால் கொலை மிரட்டல் விடுப்பது போன்று, நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகள் குறித்து பேசினால் கொலை மிரட்டல் விடப்படுகிறது என்று அச்சத்துடன் தெரிவித்தார். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.