முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும் தீபங்கர்தத்தா ஆகியோர் உதிதரவிட்டதை தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் ஏழுபேர் கொண்ட புதிய மேற்பார்வை குழுவை நியமித்தது.

இந்த குழுவில் மனிதநேய மக்கள் கட்சி தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரிதமிழகம் சார்பாக, தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன், கேரள அரசு சார்பாக கேரள அரசின் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் பிரியேஷ், மத்திய அரசு சார்பாக இந்திய அறிவியல் ஆராய்ச்ச மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விவேக் திரிபாதி, ராகுல்குமார் சிங், ஆனந்த ராமசாமி ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் முதல் முறையாக நாளை பெரியார் அணை ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து அத்துமீறும் கேரளா அரசை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் விவசாயிகளின் சார்பாக 14 கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெரியாறு அணை மேற்பார்வை குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இன்று தமிழக கேரள எல்லையான லோயர் கேம்ப்பில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெரியார் வைகை பாசன விவசாய சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, தேனி மாவட்ட வர்த்தகர் சங்க தலைவர் செல்வகுமார், நில வணிகர் நல சங்க கம்பம் நகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக லோயர் கேம்பில் இருந்து கோஷம் எழுப்பி வாறு தமிழக எல்லை குமுளி நோக்கி ஊர்வலமாகச் சென்ற விவசாயிகளை, பென்னிகுக் மணிமண்டபம் அருகே உத்தமபாளையம் டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான போலீசர்கள் தடுத்து நிறுத்தினார்.

இதை அடுத்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் கம்பம் குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து பாதித்தது. பின்னர் டிஎஸ்பி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மணிமண்டபம் செல்லும் பாதையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், புதிய மேற்பார்வை குழுவில் இடம்பெற்றுள்ள இரண்டு கேரளா அதிகாரிகளை குழுவில் இருந்து நீக்க வேண்டும். 1979 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை மீது போடப்பட்ட மறு ஒப்பந்தத்தின் நகல்களை பொது வெளியில் பார்வைக்கு வைக்க வேண்டும். 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கொடுத்த தீர்ப்புகள் ஏன் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒப்பந்தப் பகுதியில் வரும் 8,400 ஏக்கரில் கேரள மாநில அரசு செய்திருக்கும் முழுமையான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். முற்றிலும் நீர் தேங்கும் பகுதியில் வரும் ஆனவச்சால் பகுதியில், கேரள மாநில வனத்துறையால் அமைக்கப்பட்டிருக்கும்.
மெகா கார் பார்க்கிங் கை, மறு அளவீடு செய்வதற்கு சர்வே ஆஃப் இந்தியாவை தவிர்த்து, இந்தியாவில் உள்ள முன்னணி சர்வே முகமைக்கு அளவீடு செய்ய உத்தரவிட வேண்டும். 130 அடிக்கு மேல் தேக்கடியில் இருந்து அணை வரை கர்னல் பென்னிகுவிக்க அவர்களால் போடப்பட்ட மண் சாலையை, தார்ச் சாலையாக மேம்படுத்தி, தளவாடப் பொருட்களை அணைக்கு கொண்டு செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எந்தவித எழுத்து பூர்வமான ஒப்புதலும் இல்லாமல், அணைக்குள் அத்துமீறி ஆக்கிரமித்திருக்கும் கேரள மாநில காவல்துறையை உடனடியாக வெளியேற்றி உத்தரவிட வேண்டும். 11 ஆண்டுகளாக அணைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தமிழன்னை படகை இயக்குவதற்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு, அணைக்குள் அதிகாரமற்ற பூஜ்ஜிய நிலையை உருவாக்கி, அணையை விட்டு அவர்களை வெளியேற்றி உத்தரவிட வேண்டும். பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பட்டுப்போன எட்டு மரங்களை அப்புறப்படுத்துவதற்கும், 15 மரங்களை வெட்டுவதற்கும் உடனடியாக உத்தரவிட்டு பேபி அணை பலப்படுத்தப்பட வேண்டும்.

கேரள மாநில சுற்றுலா துறையின் 8 படகுகளும் அணைக்குள் செல்வதற்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஏற்கனவே அணைக்குள் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் படகை, மீண்டும் அணைக்குள் இயக்கப்படுவதற்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். மழைமானி அமைந்திருக்கும் முல்லைக்கொடிக்கு செல்வதற்கு பெரியார் புலிகள் காப்பகம் விதித்திருக்கும்.
தடையை நீக்கி, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழை மானியை அளவீடு செய்ய உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அணைக்குள் விடப்பட்டிருக்கும். படகுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவை தமிழக அரசின் ஒப்புதலோடு இயங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களை முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்துவதற்கு பிரதான குழு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வர்த்தக சங்க கம்பம் நகர தலைவர் எல்.முருகன், வர்த்தகர் சங்க மக்கள் தொடர்பாளர் வின்னர் அலீம், நகர து.தலைவர் சாகுல் ஹமீது, மனிதநேய மக்கள் கட்சி தேனி மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, மாவட்ட சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் நியாஸ் அஹமது, இல்ல வணிகர் நல சங்கம் கிருஷ்ணமூர்த்தி, கணேசன், சிவராம், விவசாய சங்கம் சிவமணி, முத்துக் கிருஷ்ணன், கோட்டை குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.