திருப்பரங்குன்றம் அருகே அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் மாடுகளுக்கு கத்திரிக்காயை தீவனமாக போடும் நிலையில்விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிக விளைச்சல்,விலை குறைவு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி உள்ளிட்டபல்வேறு கிராமங்களில் ஏராளமாக விவசாயிகள் தங்களது தோட்டத்தில் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி பல ஏக்கரில்கத்தரி,மிளகாய்,தக்காளி விவசாயம் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டில் தக்காளி அதிக விளைச்சல் இருந்த ஆனால் விலை இல்லை. அதனால் தக்காளி பழங்களை தங்களால் வளர்க்கப்பட்டு வரக்கூடிய மாடுகளுக்கு தீவனமாக போட்டனர்.
இதனால் தக்காளி விவசாயம் செய்த விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நிலையில் உணவுக்கு (குழம்புக்கு) தேவைப்படும் கத்திரியை இந்த ஆண்டில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல ஏக்கரில்பயிரிட்டு விவசாயம் செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி கத்தரி விளைச்சல் அதிகமானது. ஆனால் விலை மிகவும் குறைவானது. இதனால்கடந்த ஆண்டு போலவே மாடுகளுக்கு தீவனமாக கத்திரிக்காய் உருமாறி உள்ளது.
விவசாயம் முதுகெலும்பு

தென்பழஞ்சியை சேர்ந்தவிவசாயி மெய்ராஜன் கூறும்போதுநாட்டின் முதுகெலும்பு விவசாயம், விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில்கை வைக்க முடியாது என்றெல்லாம் சொல்லி விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பெருமை படுத்துகிறார்கள்.அது உண்மையிலே மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் என் போன்றசிறு குறு விவசாயிகள் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.விவசாயத்தை நம்பி இருக்கின்ற என் போன்றோர்களுக்கு பிரதானதொழிலாக விவசாயம் இருப்பதால் மாற்றுத் தொழில் செல்ல முடியாமல் வட்டிக்கு பணம் வாங்கி கத்திரி, தக்காளி என்று விவசாயம் செய்கிறோம்.
கடந்த ஆண்டில் தக்காளிக்கு விலை இல்லை. பெரும்நஷ்டம். தக்காளிக்காகவாங்கிய கடனை தற்போது வரை அடைக்க முடியவில்லை மாடுகளுக்கு தீவனம் இருந்த போதிலும் விவசாயம்செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கத்திரி விவசாயம் செய்தேன்கடந்த. கார்த்திகை மாதத்தில் மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்திரி ரூ 30 க்கு போனது.அப்புறம் ஒரு சில நாளில் ரூ 20, ரூ 10 என்று விலை இறங்கியது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ ரூ5, ரூ.3 என்று விலை குறைந்து விட்டது.இது உணவில்பயன்படுத்துவதற்கு மக்களுக்கு பயனாக இருந்தாலும் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்.தோட்டத்தில் கத்தரி செடிகளில் இருந்து கத்தரி பறிப்பதற்கு பெண்தொழிலாளிகளுக்கு கூலி,வாகனங்களில் ஏற்றி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லுவதற்கு கூலி,வாகனத்தில் இருந்து இறக்கும் கூலி என்று பார்த்தால் ஒரு ரூபாய்மிஞ்சாது.

அதனால் கத்திரிகாய்களைசெடியிலே பறிக்கமால் விட்டுவிட்டோம். அது பழமாகிஉதிர்ந்துவீணாகப் போகிறது. மனம் கேட்காமல் கத்திரிகாயை பறித்து தீவனமாகவும் போட்டு வருகிறோம்.இதே நிலை தொடர்ந்தால் பெரும் நஷ்டத்தில் நாளடைவில்விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் இதைகருத்தில் கொண்டு அரசே விலையே நிர்ணயிக்க வேண்டும்.என்றார்.




