லாஸ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலங்கை மக்களாகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டு அதில் எங்களுடைய அனைத்து சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்தோம். பிறகு சுனாமி, குண்டுவெடிப்பு, கொரோனா வைரஸ் என அடுத்தடுத்து பல சிக்கல்களை எதிர்கொண்டு தற்போது பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கிறோம்.
இவற்றிற்கெல்லாம் நாங்கள் காரணமில்லை என்றாலும் ஒவ்வொரு சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருக்கின்றோம். தற்போது இந்த பொருளாதார நெருக்கடியையும் நாங்கள் சமாளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்