• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரபல தமிழ் நடிகையின் தாயார் மரணம்

ByA.Tamilselvan

Nov 23, 2022

பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. கடந்த 1974-ம் ஆண்டு வெளியான ‘முருகன் காட்டிய வழி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீபிரியா.
ஸ்ரீப்ரியா, நடிப்பை தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக கலைஞராகவும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பும் வகித்து வருகிறார்
நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி.புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரிசாமியின் மனைவியான கிரிஜா பக்கிரிசாமி, ‘காதோடு தான் நான் பேசுவேன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அத்துடன், ‘நீயா’, ‘நட்சத்திரம்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், கிரிஜா பக்கிரிசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. அவருடைய மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.