• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் 6 போட்டியாளர் தனலட்சுமியின் அதிரடி முடிவு..

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோவில் போட்டியாளர் தனலட்சுமி அதிரடியாக இனி கேம் விளையாடப்போவதாக பேசியள்ளார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 44-வது நாட்களை நெருங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.பிக்பாஸ் சீசன் 6 இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதையும் தெரிவிக்குமாறு கூறப்பட்டது. இதில் தனலட்சுமி தனக்கு வாதாடுவதற்காக ஆயிஷாவை தேர்வு செய்தார். இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், இதற்கு முன்பு 40 நாட்கள் இருந்த வீட்டை நான் வித்தியாசமாக காண்பிக்க வேண்டும் என்று அவ்வளவு ஆர்வமாக இருந்தேன். ஆனால் அது யாருக்கும் புரியவில்லை என்று தனலட்சுமி, ஆயிஷாவிடம் வருத்தத்துடன் கூறுகிறார். பின்னர் நீதிமன்றத்தில் நந்தினியையும் சிவினையும் விக்டிமாக அசெஸ் பண்றேன் என்று ஆயிஷா கூறுகிறார். இதற்கு பிக்பாஸ் நந்தினி மற்றும் சிவினிடம் சாட்சியாக இருக்க சம்மதமா? என்று கேட்கிறார். அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் கோபமடைந்த தனலட்சுமி இனி என் கேம்ம நான் எப்படி விளையாடுறேனு பாரு என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு முன்பு நந்தினி மற்றும் சிவினிடம் தனலட்சுமி பிரச்சினையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.