• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்!!

ByA.Tamilselvan

Feb 5, 2023

நடிகரும், பிரபல இயக்குநருமான டி.பி.கஜேந்திரன்(68) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
1988ஆம் ஆண்டு வீடு, மனைவி, மக்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், பாண்டிய நாட்டுத் தங்கம், பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். டி.பி.கஜேந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வகுப்புத் தோழர். எனவே, முதலமைச்சர் அண்மையில், டி.பி.கஜேந்திரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் காலமானார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நேற்று பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்தார். அதில் இருந்தே திரையுலகம் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் கடந்த சில நாட்களில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.