• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சீரியலில் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

நடிகை தேவதர்ஷினி சீரியலில்தான் தனது கேரியரை துவக்கினார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். இந்நிலையில் தனக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்த சீரியலில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளது, இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!

நடிகை தேவதர்ஷினி டிவி தொகுப்பாளராக தனது கேரியரை துவக்கினார். இந்த புகழ் வெளிச்சத்தை அடுத்து சன் டிவியின் மர்மதேசம் சீரியலில் தான் முதல்முறையாக நடிகையாக நடித்தார். இந்தத் தொடர் அவருக்கு பரவலான அங்கீகாரத்தை கொடுத்தது. தொடர்ந்து சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் அவரை பட்டித் தொட்டியெல்லாம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து அவர் நடித்த ரமணி vs ரமணி தொடர் அவரை புகழின் உச்சிக்கே இட்டுச் சென்றது. இந்தத் தொடரில் அப்பாவித்தனமாக இவர் செய்யும் சேட்டைகளும், இவரது சைகைகளும், அந்த சீரியலுக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது!

தொடர்ந்து பார்த்திபன் கனவு படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்திருந்தார். இதிலும் வேலையில்லாத கணவனை திருத்த இவர் மேற்கொள்ளும் முயற்சிகள், விவேக்கின் காமெடிகளுக்கு ஈடுகொடுத்து நடித்திருந்த வேடம் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து இவர் அடுத்தடுத்து சிறப்பான கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளாவுடன் இணைந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தவை. இதேபோல 96 படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்து புகழ் வெளிச்சம் பெற்றார்.

தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவதாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சன் டிவியின் பிரபல தொடரான ரமணி vs ரமணி தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முந்தைய சீசன் தேவதர்ஷினிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த நிலையில், அவர் மூன்றாவது சீசனிலும் அவர் நடித்து பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் நடித்த தி பேமிலி மேன் 2 சீரிசில் தேவதர்ஷினியின் கேரக்டர் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால்தான் ரமணி vs ரமணி தொடரில் நடிக்க தேவதர்ஷினி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.