
மகாராஷ்டிரா மாநிலம் வகோலி என்கிற இடத்தில யோகித்தா சதவ் என்ற பெண் ஒருவர் பேருந்து ஓட்டுனர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரே அந்த பேருந்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற இடத்திற்கு பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தடுமாற்றம் அடைந்து அவர் ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழும் நிலைக்கு சென்று விட்டார். பெண் பயணி ஒருவர் பேருந்தை நிறுத்தும்படி கேட்டார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்தபெண் பயணியே பேருந்தை இயக்கி அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.