திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை செல்லும் மன்னவனூர் சாலையில் கூக்கால் பிரிவு இரட்டை போஸ்ட் அருகே தொடர் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் விழுந்தது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மரத்தை அகற்றும் பணியில் வாகன ஓட்டிகள் மற்றும் மன்னவனூர் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சாலையில் இரு பகுதிகளிலும் புதர் மண்டி உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். எதிரேவரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புதர் மண்டி உள்ளது. மேலும் விபத்து ஏற்படுத்தக்கூடிய சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.








