நியாய விலை கடை பணியாளர் மீது கஞ்சா வழக்கு போட்டதை கண்டித்தும், மதுபோதையில் நியாய விலை கடை பணியாளர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதை கண்டித்தும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ,கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் நியாயம் கேட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் மீது பொய் வழக்கு மற்றும் நிரந்தர பணிநீக்கம் செய்து பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை கண்டித்தும் தேனி, திண்டுக்கல், மதுரை, மாவட்டங்களில் மண்டலம் சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க பாலசுப்பிரமணியம் தலைமையில் மாபெரும் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறிப்பாக நியாய விலை கடை பணியாளர்கள் மீது கஞ்சா வழக்கு போட்டது கண்டித்தும் இரண்டு பணியாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தது குறித்தும் சம்பள குறைப்பு செய்தது குறித்தும் மதுபோதையில் நியாய விலை கடையை பணியாளர்களை தகாத வார்த்தைகளை பேசுவதை கண்டித்தும் கருப்பு சட்டை அணிந்து ஏராளமான நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.