• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி

Byவிஷா

Sep 13, 2025

வங்கிகளைப் போலவே பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர். வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
மத்திய அரசு, தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும், தொழிலாளர்களும் செலுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம்சங்களுடன் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அடுத்த மாதம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதேபோல வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் அக்டோபர் 10, 11ம் தேதிகளில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை பரிசாக இந்த வசதி அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.