• Mon. Apr 29th, 2024

புத்தாண்டில் விண்ணில் பாய்கிறது “எக்ஸ்போசாட்” செயற்கைக்கோள்..!

Byவிஷா

Dec 30, 2023

வருகிற 2024 புத்தாண்டு தினத்தன்று, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., – சி 58 ராக்கெட் உதவியுடன் “எக்ஸ்போசாட்” செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., – சி 58 ராக்கெட் உதவியுடன், ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை ஜன., 1 காலை 9:10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. செயற்கைக்கோளின் மொத்த எடை, 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ., தூரம் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும்.
செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன எக்ஸ்-ரே கருவிகள், வானியலில் ஏற்படும் துருவ முனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடுவது, நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் உட்பட, 50 ஆதாரங்களை ஆய்வு செய்யும். இதன் ஆயுள்காலம், 5 ஆண்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *