• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வெடி வெடிக்க தடை செய்ய வேண்டும்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ByBala

Apr 21, 2024

வெடி வெடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என காரியாபட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இங்கு மிகவும் அரிதாக காணப்படும் பழந்தின்னி வௌவால்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழியாக செல்பவர்கள் அதிக ஒலி எழுப்புவதுடன், மேளதாளங்கள் அடிப்பது, பட்டாசு வெடிப்பதனால் வௌவ்வால்கள் பயத்தில் பறந்து செல்கிறது. இதனை தடுக்க இப்பகுதியில் வெடி வெடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.