பௌர்ணமி முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி 2015 ம் ஆண்டுகளுக்கு பின்னர் குறிப்பிட்ட மாதத்தில் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் என குறிப்பிடப்பட்ட சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி முன்னிட்டு இன்று ஏப்ரல் 21 முதல் 24ஆம் தேதி வரை வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதையடுத்து இன்று பிரதோஷத்தை முன்னிட்டு காலை முதலே திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் மலைக் கோயிலில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.