சாத்தூர் அருகே முத்தாண்டியபுரம் பகுதியில் உள்ள ரகுநாதன் என்பவருக்கு சொந்தமான குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் முற்றிலும் எரிந்து சேதமான நிலையில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பட்டாசுகளும் வெடித்து சிதறின.
இந்த குடோன் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே இருந்த நிலையில் வெடி விபத்து ஏற்பட்டிருந்தாலும் அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான உயிர் சேதம் ஏற்படவில்லை.
மேலும் இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த வீடுகளில் உள்ள ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏழாயிரம்பண்ணை மற்றும் வெம்பக்கோட்டை சாத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன .
சாத்தூர் வருவாய் துறையினர் மற்றும் ஏழாயிரம் பண்ணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.